fbpx

அதிமுக சார்பில் செப்டம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் செப்டம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்; தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் ஆகிய இடங்களில் 5,100 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாததால் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 17 பூங்காக்கள் முறையாக பராமரிப்பின்றி உள்ளன. 15 இடங்களில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. அதன் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கவில்லை.

குடிநீர் வழங்கும் டேங்குகளும் பராமரிப்பின்றி உள்ளன. அம்மா உணவகங்களுக்கு போதிய மளிகைப் பொருட்களை வழங்கவில்லை. அங்கு பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாத தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் செப்டம்பர் 3-ம் தேதி மாலை 4 மணிக்கு செம்பாக்கம் காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டம் கட்சியின் மகளிரணி தலைவி பா.வளர்மதி தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டிகே.எம். சின்னையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

English Summary

The AIADMK will hold a demonstration on September 3 against the Tambaram Corporation

Vignesh

Next Post

கருப்புநிற பிரா அணிவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறதா?. அறிவியல் உண்மை என்ன?

Sat Aug 31 , 2024
Does Wearing Black Bras Really Increase Cancer Risk? Find Out the Truth

You May Like