பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கூலிப்படையை சேர்ந்த திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து, குற்றவாளி சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் விசாரணை நடத்திய போது, 2020-ம் ஆண்டு வரை சம்போ செந்தில் இவருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்த புகைப்படத்தை போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோருக்கு வழக்கு முடியும் வரை தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கும் தடை விதித்தும் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட செந்தில் நாதன், சக்தி வேல், விஜயகுமார், விமல் மற்றும் தினேஷ்குமார் ஆகிய 5 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முகநூலில் ஆபாச கருத்து வெளியிட்ட மணியரசன் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read more ;பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடாது.!! – ஜெய்சங்கர் திட்டவட்டம்