இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அனைவரும் செல்போன்கள் மற்றும் இன்டர்நெட்டுகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். மேலும் கரண்ட் பில் முதல் மளிகை சாமான்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதனால் ஆண்ட்ராய்டு போன்களின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் 10,000 ரூபாய்க்குள் வாங்குவதற்கு ஏற்ற சில மொபைல் ஃபோன்களை இந்த பதிவில் காணலாம்.
போகோ சி 55(Poco c55: தற்போது மார்க்கெட்டில் இருக்கும் செல்போன்களில் குறைந்த விலையில் பல நவீன வசதிகளை கொண்டிருக்கிறது போகோ சி 55. இந்த செல்போன்களும் ஆக்டாகோர் பிராசஸர்களை கொண்டிருக்கிறது. இந்த செல்போன்கள் 4 ஜிபி ரேம் மற்றும் 6.71 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த செல்போனில் 50 எம்பி + 2 எம்பி டூயல் ப்ரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா இருக்கிறது. 5000mah செயல் திறனுடன் கூடிய பேட்டரி மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த செல்போனின் ஆரம்ப விலை 7,205 ஆகும்.
மோட்டோ ஜி14: மோட்டரோலா அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த செல்போன் ஆக்டாகோர் பிராஸசரைக் கொண்டிருக்கிறது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே உடன் 4 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. இவற்றின் பின்பக்க கேமரா 50 மெகா பிக்சல் ஆகும். மேலும் செல்ஃபி கேமரா 8 மெகா பிக்சல் கொண்டிருக்கிறது. இந்த செல்போன்களின் பேட்டரி 5000mah திறன் கொண்டது. இதன் விலை 8499 ஆகும்.
ஷாவ்மி ரெட்மி 9 பிரைம் (Xiaomi Redmi 9): ஷாவ்மி நிறுவனத்தின் செல்போன்கள் தற்போது மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த ரெட்மி 9 பிரைம் செல்போன் ஆக்டாகோர் பிராஸசர் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இவற்றின் டிஸ்ப்ளே 6.53 இன்ச் ஆகும். இந்த செல்போன்களின் பேட்டரி செயல்திறன் 5020mah. மேலும் இவற்றில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த செல்போன் 13 + 8 + 5 + 2 எம்பி குவாட் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் பிரண்ட் கேமரா கொண்டு இருக்கிறது. இதன் விலை 9,800 ரூபாய் ஆகும்.