fbpx

”காற்றில் கரைந்தது கருப்பு நிலா”..!! 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை காலமானார். அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் வரை ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆம்புலன்ஸ் உடனே வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மரண செய்தி காலையில் வந்ததில் இருந்தே ஏராளமானோர் சென்னை நோக்கி வரத்தொடங்கினர். இதையடுத்து, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் வைக்கப்பட்டது.

அப்போது விஜயகாந்தின் உடலை பார்த்த கட்சி தொண்டர்கள் ‘கேப்டன்…கேப்டன்… என முழங்கினர். கோயம்பேடு மேம்பாலமே மொத்தமாக முடங்கியது. நெரிசல் மிகுந்த கோயம்பேட்டில் ஒரு கட்டத்திற்குமேல் அஞ்சலி செலுத்தவே முடியாத அளவிற்கு அலைகடலென மக்கள் திரண்டு வந்துவிட்டார்கள். இதையடுத்து விஐபிக்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்த கோயம்பேடுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விஜயகாந்த் உடலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்ல அரசு முடிவு செய்தது.

அங்கு பொதுமக்கள், விஐபிக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து, இன்று அதிகாலை விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் என பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. இங்கு விஜயகாந்தின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. பின்னர், 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டுள்ள சந்தனப்பேழையில் “புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” ”நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என விஜயகாந்தின் பிறப்பு, இறப்பு தேதிகளுடன் சந்தனப்பேழையில் இடம்பெற்றுள்ளன.

Chella

Next Post

அமித்ஷாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.! அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போராட்ட குழு.! அசாம் வரலாற்றின் முக்கியமான நிகழ்வு.!

Fri Dec 29 , 2023
அசாம் மாநிலத்தில் நீண்ட நாட்களாக போராடிவரும் போராட்டக் குழுவான அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA) அமைப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. அசாம் அரசியலில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் போராட்டக் குழுவான உள்ஃபா அமைப்பின் பேச்சுவார்த்தை பிரிவினைச் சார்ந்த 16 உறுப்பினர்கள் அசாம் மாநில முதலமைச்சர் மற்றும் உள்துறை […]

You May Like