கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று காற்றாடி பறக்க விட்டதாக தெரிகிறது. அப்போது நூல் எதிர்பாராத விதமாக அருந்து காற்றாடி தனியே பறந்து சென்றுள்ளது.
ஆகவே அந்த காற்றாடியை பிடிக்க அந்த சிறுவன் முயற்சித்திருக்கிறார் அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஹரிஹரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.