உத்தர பிரதேச மாநில பகுதியில் சுபியான் என்பவர் லக்னோ நகரில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் நிதி குப்தா என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். இருவருமே காதலித்து வந்த நிலையில், சில நாட்களாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததுள்ளது.
இதற்கிடையில் குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து தள்ளி விட்டு அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் சுபியான் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இளைஞர் தான் காதலித்த பெண்ணை மதம் மாறும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார் என காவல்துறையினரிடம் கொடுத்த புகாரில் பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து காயமடைந்த அந்த இளம்பெண் மருத்துவ பல்கலை கழகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இருப்பினும், சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக இறந்துவிட்டார்.நிதி குப்தாவின் பெற்றோர்கள் குடுத்த புகாரின் பேரில் சுபியான் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையில் சுபியான் தப்பியோடியிருக்கிறார்.
மேலும், காவல்துறையினர் தலைக்கு ரூ.25 ஆயிரம் பரிசு என அறிவித்து தேடி வந்துள்ளனர். இதனையடுத்து , சவுராஹா என்ற பகுதியில் போலீசாருக்கும், பதுங்கியிருந்த சுபியானுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் என்கவுண்ட்டர் நடைபெற்றுள்ளது. இதனால், சுபியானை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். காயமடைந்த சுபியானை அதே மருத்துவ பல்கலை கழகத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.