நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2300 ஆக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
2024-25 காரீப் சந்தைப் பருவத்தில் சாதாரண நெல் மற்றும் நெல் (கிரேடு-ஏ) ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2300 ஆகவும், குவிண்டாலுக்கு ரூ.2320 ஆகவும் அரசு நிர்ணயித்துள்ளது. 2024-25 காரீப் பருவ காலத்தில், நெல் கொள்முதலுக்காக (01.12.2024 வரை) விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.65,695 கோடியாகும்.
வெங்காய விவசாயிகளுக்கு உதவும் சிறப்பு திட்டம்
வெங்காயம் உள்ளிட்ட அழுகும் தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சந்தை குறுக்கீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. முந்தைய சாதாரண பருவத்தின் சராசரி விலைகளுடன் ஒப்பிடும்போது சந்தை விலைகள் குறைந்தது 10% வீழ்ச்சியடையும் போது, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நஷ்டத்தில் விற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் நிதி இழப்புகள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 50:50 என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களுக்கு 75:25 பகிர்வு விகிதம் பொருந்தும். மாநிலங்கள் தங்கள் உற்பத்தியில் 25% வரை சந்தை குறுக்கீட்டு திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யலாம்.
மேலும், உயர் மதிப்பிலான வேளாண் விளைப் பொருட்களை (தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு) மாநிலங்களுக்கிடையே கொண்டு செல்வதற்கான போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை அரசே ஏற்றுக்கொள்கிறது. இது விவசாயிகளுக்கு ஆதாயமான விலையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், சந்தையில் நுகர்வோருக்கு உயர் பயிர்களின் விலையை குறைக்க உதவிடும்.