fbpx

நாடு முழுவதும்…! குரங்கு அம்மை நோய் தடுப்பு.. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்…!

தீவிரமாக பரவும் குரங்கு காய்ச்சல்..! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!

குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

குரங்கு அம்மை (Monkeypox) பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் ஆணுக்கு அந்த நோய் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்குக் குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. முறையான நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற நிலைகளைச் சமாளிக்க நாடு முழுமையாகத் தயாராக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. அதில் தோலில் அரிப்பு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்படுவதே குரங்கம்மையின் அறிகுறி; HIV-யால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை எளிதாக தாக்குகிறது. 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே பெரும்பாலும் குரங்கம்மை தாக்குகிறது. மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார ஆயத்த நிலை குறித்து மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்: ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், இணை நோய் பாதிப்புடையவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண் இவர்களுக்கு தான் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது.

English Summary

The Central Health Department has written a letter to the state governments regarding the prevention of monkey measles.

Vignesh

Next Post

வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் முன் இந்த விஷயங்களை மறந்துறாதீங்க..!! எந்த வகையான சிலைகளை வைக்க வேண்டும் தெரியுமா..?

Tue Sep 10 , 2024
While placing Ganesha idol in your home you need to pay special attention to certain things.

You May Like