fbpx

#Rain Alert: இந்த மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் கணிப்பு…!

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வட தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை, நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 6-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தென்காசி, மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

பத்ம விருதுகள் 2023-க்கு விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி இறுதி நாள்...! உடனே அப்ளை பண்ணிடுங்க...!

Sat Sep 3 , 2022
பத்ம விருதுகள் 2023-க்கு விண்ணப்பிக்க 2022 செப்டம்பர் 15 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில், அறிவிப்பதற்கான பத்ம விருதுகள், 2023க்கு இணையம் வழியாக விண்ணப்பித்தல் மற்றும் பரிந்துரை செய்வது 2022 மே 1 அன்று தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி தேதி 2022 செப்டம்பர் 15 ஆகும். விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் தேசிய விருது இணையப்பக்கம் (https://awards.gov.in) மூலமாகவே அனுப்பப்பட வேண்டும்.இந்த விருது பெற விண்ணப்பிக்கின்றவர் அல்லது […]

You May Like