fbpx

அப்படி போடு… பள்ளி மாணவர்களுக்கு இனி இது அனைத்தும் கட்டாயம்…! அரசின் தலைமைச் செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு…!

பள்ளி ஆலோசகர் குழந்தையின் படிப்பிற்குத் தேவையான முறையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர்களுக்கு தலைமைச் செயலாளர், அனுப்பிய கடிதத்தில்; ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லையென்றால், முதலில் சரியான கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கற்றலில் குறைபாடிருக்கும் குழந்தை என அடையாளம் காணப்பட்டால், தலைமையாசிரியர் குழந்தையை District Early intervention Center, சிறப்பு கல்வியாளரிடம் ( Special Education ) அழைத்துச் செல்ல வேண்டும். கற்றலின் குறைபாடில்லாத குழந்தை என்றால், பள்ளி ஆலோசகர் குழந்தையின் படிப்பிற்குத் தேவையான முறையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஒரு குழந்தை பள்ளிச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்துத் தர வேண்டும்.

விலையில்லா பாடப்புத்தகம்..! அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!

குழந்தைகள் பெரும்பாலும் செய்யும் தவறுகளாக;; பொது போக்குவரத்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தல்பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், ஆசிரியர்களை அவமதித்தல்மற்ற குழந்தைகளை அடித்தல்ராக்கிங் செய்தல், புகைப்பிடித்தல்போதைப் பொருள் பயன்படுத்துதல், மது அருந்துதல், ஆசிரியர்களை உடல்ரீதியாக காயப்படுத்துதல், இசக்கர வானத்தை ஓட்டி வருவது, வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல், சாதி, மதம், பொருளாதர நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மற்ற குழந்தைகள் மற்றும் பணியாளர்களை புண்படுத்துதல், உருவகேலி செய்தல், பள்ளி சுவர்களில் தவறான வார்த்தை அல்லது படங்களை எழுதுதல், தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், உள்ளிட்ட ஏதேனும் செயல்களில் ஒரு குழந்தை ஈடுபட்டால், பள்ளி ஆலோசகர் முதலில் தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும். மேலும், இதே குழந்தை 2 வது மற்றும் 3 வது முறையாக தவறு செய்தால் சில ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.

ஒழுங்குமுறை நுட்பங்களாக மாணவர்களுக்கு; ஐந்து திருக்குறளை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதி காட்ட வேண்டும். இரண்டு நீதிக்கதைகளை பெற்றோர்களிடமிருந்து கற்று வகுப்பறையில் சொல்ல வேண்டும். ஐந்து செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்திற்கு படித்துக் காட்ட வேண்டும். வகுப்பு மாணவர்களை ஒழுங்குபடுத்த ஒரு வாரத்திற்கு வகுப்பின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும். சிறிய காய், கனி தோட்டம் பள்ளியில் அமைத்தல் மற்றும் 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம் எழுதுதல் வேண்டும் ‌‌.

மூன்றாவாது எச்சரிக்கையிலும் குழந்தை தனது தவறை உணரவில்லை என்றால், 4 வது நிகழ்வில் அருகில் இருக்கும் காவல் நிலையத்திலிருந்து குழந்தை நேய காவல் அலுவலர் ( CWPO ) மூலம் குழந்தைக்கு அறிவுரை, ஆலோசனை மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும். குழந்தை 5 வது முறையாக தவறாக நடந்து கொண்டால், சுற்றுச்சூழலின் மாற்றமும், நட்பு வட்டாரமும் குழந்தையை ஒழுங்குபடுத்த உதவும் என்பதால் பள்ளி நிர்வாகக் குழு ஒப்புதலோடு குழந்தையை அருகில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம். மேற்காணும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read: BOB வங்கியில் உடனடியாக வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Vignesh

Next Post

வாக்காளர்கள் அட்டை வைத்திருக்கும் நபர்களா நீங்க...? ஆகஸ்ட் 1, 2022 முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை...! முழு விவரம் இதோ...

Fri Jul 29 , 2022
வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள கோருவதற்கான புதிய விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும். முன்னதாக இருந்தது போல், 18 வயதை அடைபவர்கள் ஜனவரி முதல் தேதியை கணக்கில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக, உரிய தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு […]

You May Like