விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களுடன் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அவர் பேசுகையில்,
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் அரசியல். இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்ல வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே., பேர மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. ஜனநாயக ரீதியா என் மக்களை சந்திக்க தடை போட நீங்கள் யார்?
காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என தினம் தோறும் மக்கள் பிரச்சனைகளை மடை மாற்றி உங்கள் விரோத ஆட்சியை மன்னர் விரோத ஆட்சி போன்று நடத்தும் ஒவர்கள் ஒன்றாய் இரண்டா?.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு நெருக்கடி? சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அமைதியாக இருக்கிறேன். அணை போட்டு ஆற்றை தடுக்கலாம் காற்றை தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்தால் சூறாவளி காற்றாக ஏன் புயலாக கூட மாறும்.
உங்கள் ஆட்சி பற்றி கேள்வி கேட்டால் மட்டும் இப்படி கோவம் வருகிறது. என் சகோதரிகளான பெண்கள் தான் உங்கள் அரசியலுக்கு முடிவு கட்டப் போகிறார்கள். அத்தனைக்கும் 2026 தேர்தல் முடிவுக்கு கொண்டு வரும். தமிழ் நாட்டில் இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி.. அது TVK-க்கும் DMK-க்கும் இடையே தான்.. 2026ல் பதில் தெரியும்..!” என்றார்.