fbpx

அப்படி போடு…! திருமணமான கணவனுக்கு இதற்கு உரிமை இல்லை…! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

பரிசாக வந்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் அதை அவர்களின் அனுமதியின்றி எடுக்க கணவர்களுக்கு கூட உரிமையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணத்தின் போது தனக்கு சீதனமாகவும், பரிசாகவும் வழங்கப்பட்ட நகைகளை தன்னிடம் இருந்து பறிக்க முயல்வதாக கூறி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அமீத் மகாஜான், திருமணம், பரிசு உள்ளிட்டவற்றின் மூலம் கிடைத்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து. அதை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியே எடுக்கவும், விற்கவும், அடகு வைக்கவும் கணவன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் உரிமை இல்லை.

தங்க நகை மட்டுமின்றி வீட்டு உபயோக பொருட்களை மனைவியின் அனுமதியின்றி எடுத்துச் செல்லவும் சட்டத்தில் அனுமதியில்லை. திருமணமான பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றவும் கணவருக்கு உரிமை இல்லை என கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Vignesh

Next Post

அட இது தெரியாம போச்சே...! ஜெனரிக் மருந்து கடைகள் திறக்கும் நபர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி...!

Sun Jan 1 , 2023
அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரதமர் மலிவு விலை மருந்துகள் திட்டம் நவம்பர், 2008-ல், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறையால் தொடங்கப்பட்டது. 3,000 மருந்தகங்களைத் திறக்க வேண்டும் என்ற இலக்கு 2017 டிசம்பரில் எட்டப்பட்டன. மேலும், மார்ச், 2020ல் மொத்தம் 6,000 விற்பனை நிலையங்கள் என்ற மாற்றி அமைக்கப்பட்ட இலக்கும் எட்டப்பட்டது. கடந்த நிதியாண்டில் விற்பனை நிலையங்களின் […]

You May Like