திருவள்ளூர் மாவட்டம் இஸ்லாம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரின் தாயார் சர்தார்பீ. முகமதுவுடன், தாயார் மோட்டார் சைக்கிளில் கடந்த புதன்கிழமை உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திடீரென்று எதிர்பாராமல் சாலையின் நடுவே மாடு ஒன்று வந்ததுள்ளது.
அதிர்ச்சியடைந்த முகமது செய்வதறியாமல் வேகமாக வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்த முயற்சித்துள்ளார். வேகமாக சென்ற நிலையில், திடீரென ப்ரேக் போட்டதினால் பின்னால் அமர்ந்திருந்த தாய் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தயாருக்கு படுகாயம் ஏற்பட்டதை தொடர்ந்து சாலையில் இருந்தவர்கள் உதவியுடன் தாயை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்