fbpx

மூளையை தின்னும் அமீபா : உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

அமீபிக் மூளைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தான வழிகாட்டுதல்களை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை வெளியிட்டுள்ளது.

கேரளாவில்  மூளையைத் தின்னும் அமீபா நுண்ணியிரி பரவி வருகிறது. இதனால் ஏரி, குளங்களில் குளித்தவர்களின் சுவாசத்தின் வலியாக மூளையை பாதிப்படைய செய்கிறது.  இதனையடுத்து  தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இந்த நிலையில் தான், அரிய வகை மூளை தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், முதன்மை அமீபிக் மெனிங்கோ-என்செபாலிடிஸ் (பிஏஎம்), என்பது யூகாரியோட் நெக்லேரியா ஃபோலேரி மூலம் மூளையில் ஏற்படும் அபாயகரமான தொற்று ஆகும். இதற்கு மூளைக்காய்ச்சல் போன்ற தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும். கேரளாவில் இருந்து சமீபத்தில் பதிவாகும் வழக்குகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

தேங்கி நிற்கும், மாசுபட்ட அழுக்கு நீரில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் நீந்துவதற்கும், குளிப்பதற்கும் அனுமதிக்க கூடாது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்டிப்பாக அறிவுறுத்த வேண்டும். தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். பொது சுகாதார வழிகாட்டுதல்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் செய்யப்பட வேண்டும்.

இந்த சூழலில் உயிரினம் உயிர்வாழ முடியாது என்பதால், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 2 பிபிஎம்க்கு மேல் குளோரின் அளவை சம்பந்தப்பட்ட உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட வேண்டும். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான ஏதாவது நிகழ்வை கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

English Summary

The Department of Public Health and Disease Prevention, Government of Tamil Nadu has issued guidelines on what to do to protect yourself from Amoebic Encephalitis.

Next Post

எச்சரிக்கை!. 24 மாநிலங்களில் பரவிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!. 300க்கும் மேற்பட்ட பன்றிகள் அழிப்பு!

Mon Jul 8 , 2024
Warning! African swine fever spread in 24 states! More than 300 pigs destroyed!

You May Like