fbpx

டிசம்பர் 3-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டாயம்…! தமிழக அரசு உத்தரவு…!

மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க டிசம்பர் 3-ம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதை உறுதிசெய்யும் நோக்குடன் உள்ளடக்கிய கல்வியையும் பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனி நபர் கல்வித்திட்டம் (IEP) மூலம் அவரவர் நிலைக்கேற்ற இலக்கை வடிவமைத்து அவர்களுக்கு சிறப்பு கல்வி அளித்தும், அவர்களின் முன்னேற்றத்தினையும் பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விஸ்வரூபமெடுக்கும் டெங்கு..!! பள்ளி, கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!

இந்தக் கல்வி ஆண்டில் சுமார் 1.3 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கல்வி, அனைத்து குழந்தைகளுக்குமான உரிமை. ஆகவே, எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரவும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் டிசம்பர் 3-ம் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது…

Tue Nov 15 , 2022
காலை சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் அவசர அவசரமாக வேலைக்கு செல்வோர் வரை பலரும் காலை செய்யும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது காலை உணவை சாப்பிடாமல் தவற விடுவது. நீண்ட நேர தூக்கம், ட்ராஃபிக் ஜாம், மீட்டிங், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது என காலை உணவை சாப்பிடாததற்கு மக்கள் கூறும் காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நீங்கள் காலை உணவை தவறாமல் சாப்பிடுகிறீர்களா..? […]

You May Like