மூத்த குடிமக்கள் வீட்டை வாடகை தராமல் ஆக்கிரமித்த திமுக வட்ட செயலாளரை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.
திமுக வட்ட செயலாளர் ராமலிங்க என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வாடகை தராமலும், வீட்டை காலி செய்யாமலும் ஆக்கிரமித்துள்ளதாக சென்னையை சேர்ந்த கிரிஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து திமுக வட்ட செயலாளர் ராமலிங்க சார்பில் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்வதுடன், வாடகை பாக்கியையும் திருப்பி தருவதாக கூறினர்.
ஆனால் தற்போது வரை ராமலிங்கம் வீட்டை காலியும் செய்யவில்லை, வாடகை பாக்கியும் தரவில்லை. இந்நிலையில் இந்த வலக்கை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதி, கிரிஜாவின் வீட்டை ஆக்கிரமித்து வரும், திமுக வட்ட செயலாளர் ராமலிங்கத்தை அப்புறப்படுத்த சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்