fbpx

சூடு பிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…! பா.ஜ.க தனித்து போட்டியா…? அரசியல் விமர்சகர்கள் கருத்து…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்தான ஆலோசனையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்து களமிறங்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு இன்று எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

Vignesh

Next Post

இபிஎப் பணம் வரவில்லையா...? 5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் புகார் செய்யலாம்...! எப்படி தெரியுமா...?

Fri Jan 20 , 2023
இபிஎப் உறுப்பினர்கள் இபிஎப் தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை பதிவு செய்ய EPF i-Grievance Management System-ஐ பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. EPFIGMS என்பது இபிஎப்ஓ வழங்கும் சேவைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட போர்டல் ஆகும். குறைகளை எந்த இடத்திலும் பதிவு செய்யலாம் மற்றும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேரும். குறைகளை புது தில்லியில் உள்ள தலைமை […]

You May Like