fbpx

ரெடியா… மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…! இன்று காலை 10 மணி முதல்…! யாரும் தவற விடாதீங்க…!

இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை – 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

Vignesh

Next Post

சூடு பிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...! பா.ஜ.க தனித்து போட்டியா...? அரசியல் விமர்சகர்கள் கருத்து...

Fri Jan 20 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு […]

You May Like