fbpx

ஆசை ஆசையாக மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல ஓடி வந்த தந்தை! கொலை செய்யப்பட்ட கொடூரம்!!!

சென்னை புளியந்தோப்பு ஏ.எம். கார்டன் பகுதியைச் சார்ந்தவர் முனுசாமி(37). இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லிக்குளம் வணிக வளாகத்தில் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென்று கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். காவல்துறையினரின் மூலமாக மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகள் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கினர். இந்த நிலையில் தான் திருவள்ளூர் மாவட்ட டவுன் காவல்துறையினர் நேற்று அதிகாலை வழக்கம் போல வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்தனர், அந்த ஆட்டோவில் ஐந்து பேர் இருந்தனர்.

அவர்கள் சென்னை கொடுங்கையூர் அஷ்ரப் அலி(28), வியாசர்பாடி மணிகண்டன்(27), புளியந்தோப்பு அப்பாஸ்(28), சூளை கிஷோர்(29), அல்லிக்குளம் ஆபிரகாம்(19) உள்ளிட்டோர் என்பதும், அல்லிக்குளம் வணிக வளாகத்தில் முனுசாமியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றவர்கள் இவர்கள்தான் என்றும் காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் ஐவரும் பெரிய மேடு காவல் நிலைய ஆய்வாளர் தீபக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் அல்லிக் குளத்தில் இருக்கின்ற ஒரு கைபேசி கடையில் அஷ்ரப்அலி ,அப்பாஸ், உள்ளிட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர்.

அவர்கள் திருட்டு கைபேசிகளை வாங்கி விற்பனை செய்தது குறித்து முனுசாமி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். ஆகவே இதன் காரணமாக, உண்டான முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு இவர்கள் முனுசாமியை கொலை செய்திருக்கிறார்கள் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கொலையான முனுசாமிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. நேற்று முன்தினம் அவருடைய மகன்களில் ஒருவரின் பிறந்த நாளாகும். மகன் பிறந்த நாளில் முனுசாமி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது அவருடைய குடும்பத்தினரிடையே மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கி இருக்கிறது.

Kathir

Next Post

சாலையில் நடந்து வந்த இணைபிரியா நண்பர்கள்! மின்னல் வேகத்தில் வந்த கார்... நொடி பொழுதில் பறிபோன உயிர்!

Mon Dec 5 , 2022
பீகார் மாநிலத்தை சார்ந்த அவுதேஷ்(24), நிதீஷ்குமார்(24) உள்ளிட்ட இருவரும் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்து இருக்கின்ற சீராபாளையம் என்ற பகுதியில் இருக்கின்ற தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். அத்துடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்பில் இவர்கள் இருவரும் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது. இப்படியான சூழ்நிலையில், நேற்றைய தினம் இரவு அவுதேஷ்குமார், நிதீஷ்குமார் உள்ளிட்டோர் மலுமிச்சம்பட்டிக்கு சென்று தங்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்கி இருக்கின்றனர். அதன் பிறகு […]

You May Like