10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு இன்று தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நடப்புக்கல்வியாண்டில் மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக முதல் பருவத்தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த முதல் பொதுத்தேர்வை சந்திக்கக்கூடிய 10 ,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த இரு மாதங்களில் நடத்தப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவிலும் பொதுவான கேள்வித்தாள் அடிப்படையிலும் இந்த மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பருவத்தேர்வு, நாளை தொடங்கி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.