fbpx

தமிழக அரசியலில் டுவிஸ்ட்… அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம்…! முக்கிய புள்ளி கூறிய கருத்து…!

அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என முன்னாள் ஐ.டி விங் செயலாளர் பகிரங்க கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை இரண்டு குழுக்களும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் பயன்படுத்தப்பட்ட இந்த ஃபார்முலா தமிழகத்திலும் ஏற்படுமா என்று அனைவரும் மத்தியில் ஒரு பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தை தொடர்ந்து கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மூலம் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஈ.பி.எஸ் அணியும் ஓ.பி.எஸ் அணியும் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் இருக்கும் போது தற்போது தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இப்படி அதிமுகவில் உன் கட்சிப் மோதல் நிலவிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாற்று கட்சியினர் கட்சியில் இணையும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஈ.பி.எஸ் அணியில் இருந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இணைந்துள்ளார். தற்போது மீண்டும் ஓ.பி.எஸ் பக்கம் நிர்வாகிகள் தொடர்ச்சியாக இணைந்து வருவதால் டெல்லி கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக அதிமுகவின் முன்னாள் ஐ‌.டி விங் செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் பகிரங்க கருத்து ஒன்றை தனது பெற்ற பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கிரீன் சிக்னல் கொடுத்த டெல்லி… மீண்டும் ஓ.பி.எஸ்-யிடம் மைத்திரேயரன் வந்து சேர்த்துள்ளார். இன்னும் பல முக்கிய தலைவர்கள் ஓபிஎஸ் உடன் இணைய வரிசையில் காத்திருக்கின்றனர். விரைவில் ஒரு இடைத்தேர்தல், சின்னம் முடக்கம்..! இதை காணப் போகிறோம் விரைவில்…. காத்திருப்போம் மேலும் சுவாரசியமான பல திருப்பங்களுக்கு என சூசகமாக பதிவு செய்துள்ளார்.

Vignesh

Next Post

குஷியோ குஷி... கனமழை காரணமாக இந்த 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!

Mon Oct 10 , 2022
கனமழை காரணமாக உத்திரபிரதேசத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச மாநிலம் அலிகாரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அலிகாரில் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து என் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அண்டை பகுதிகளில் […]

You May Like