fbpx

#கேரளா : இளம் பெண்ணை தனது ஆண் நண்பர்களுக்கு இரையாக்கிய தோழி..விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

கேரள மாநில பகுதியில் உள்ள காக்கநாடட்டில் மாடல் அழகியான 19 வயது இளம் பெண் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தோழியாக இருந்துள்ளார்.

அவர்கள் இருவரும் நேற்று முந்தைய தினத்தின் இரவில் கொச்சி எம் .ஜி சாலை பகுதியில் நிகழ்ந்த ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளனர். அந்த ராஜஸ்தான் பெண்ணினுடைய மூன்று ஆண் நண்பர்களும் அதே பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த நபர்கள் மாடல் அழகிக்கும் அறிமுகமான நிலையில், பார்ட்டியில் மது குடித்ததால் மாடல் அழகி மயக்க நிலை அடைந்துள்ளார். 

அதனை தொடர்ந்து அவரை வீட்டில் கொண்டு இறக்கி விடுகிறோம் என்று சொல்லி தார் வாகனத்தில் ஏற்றியுள்ளனர் அந்த இளைஞர்கள். ராஜஸ்தான் தோழி ஓட்டலிலே நின்றுள்ளார். மூன்று இளைஞர்களும் மாடல் அழகியை ஓடும் காரிலே கூட்டுப் பாலியல் வன்கொடுமை உட்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் சில நேரத்துக்கு பிறகு மீண்டும் அதே ஓட்டலுக்குச் சென்று ராஜஸ்தான் தோழியையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காக்கநாடு பகுதிக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் மயக்கம் தெளிந்த பெண் இதுபற்றி தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். மாடல் அழகியின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜஸ்தான் பெண், மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மது அருந்திய ஓட்டலில் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜஸ்தான் பெண் வேண்டும் என்றே பிளான் செய்து தன்னுடைய  மாடல் தோழியை நண்பர்களுக்கு விருந்தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைதுச் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை போலீஸ் வெளியிடவில்லை. ஆனால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

Baskar

Next Post

2 வயது மகளுக்கு போதைப் பொருள் கொடுத்த தந்தை.. ஏற்பட்ட விபரீதம்..!

Sat Nov 19 , 2022
முல்லைத்தீவு பகுதியில் உள்ள கிழக்கு பகுதியில் 2 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து புல்மோட்டை என்கிற வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சைக்கு பலனின்றி திருகோணமலை மாவட்ட பகுதியில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப் பொருள் கலந்துள்ளது என தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, விசாரணையில் குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி என்கிற ஐஸ் போதைப் […]

You May Like