fbpx

அரசு மருத்துவமனையில் மாத்திரயை மாற்றி கொடுத்ததால் பச்சிளம் குழந்தைக்கு உடல் நடுக்கம்- பரபரப்பு

அரசு மருத்துவமனையில் மாத்திரயை மாற்றி கொடுத்ததால் பச்சிளம் குழந்தைக்கு உடல் நடுக்கம்- பரபரப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தைக்கு மருந்தகத்தில் மாத்திரையை மாற்றிக்கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, புது கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் – சிந்து தம்பதியின் 45 நாள் குழந்தைக்கு கடந்த 31ஆம் தேதி, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் கொடுப்பதற்காக மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை குழந்தையின் பெற்றோர், மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் வாங்கிச் சென்றுள்ளனர்.  இந்நிலையில் வீட்டிற்கு சென்றதும் குழந்தைக்கு காய்ச்சல் வந்ததால், அவர்கள் வாங்கி வந்த மாத்திரையை கொடுத்துள்ளனர். 

சிறிது நேரத்தில் குழந்தையின் கை, கால்கள் நிற்காமல் ஆட தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர் இல்லாததால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் தங்களது குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவர் சரியான மாத்திரையை தான் பரிந்துரைத்துள்ளார் எனவும், மருந்தகத்தில் வாங்கும்போது மாத்திரை மாறியிருக்கலாம், எனவும் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அகத்தியன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

ஆன்லைன் விளையாட்டில் பல லட்ச ரூபாய் இழந்த சினிமா கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை

Sun Jun 4 , 2023
ஆன்லைன் விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததால் சினிமா கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறையை சேர்ந்த தேவதாசன்(40), கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி சினிமா கேமராமேனாக பணியாற்றி வந்தார். அவர் ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்து, கடன் ஏற்பட்டதால், நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார். அதன்பிறகு மனைவி ஊரான பூத்துறை கோயில் வளாகத்தில் வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் […]

You May Like