fbpx

Tn govt: 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இனி இதுவும் கட்டாயம்…! தமிழக அரசு அதிரடி…

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் முதற்கட்டமாக 2022- 2023-ம் கல்வியாண்டில் காலை உணவு திட்டம் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைவாழ் கிராமங்களில் உள்ள 1,545 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு ரூ.33.56 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அரிசி அல்லது ரவை அல்லது உள்ளூரில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்ககூடிய காய்கறிகள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என தமிழக அரசு வேலைக்கு உள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Tax: சொத்து வரி உயர்வு... முதல் அரையாண்டிற்கான வரி ரூ.3,695 வசூல்...! ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு...!

Thu Jul 28 , 2022
சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சொத்து வரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்ட முன்வடிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கடந்த சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அறிவித்தது. இந்நிலையில் சென்னை சேர்த்த ஒருவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில் அடுக்குமாடி குடியிருப்பின் […]

You May Like