fbpx

#சென்னை : திருமண நாள் அன்றே மர்ம முறையில் மணமகன் இறப்பு.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

சென்னை மாநகர பகுதியில் தாம்பரத்தில் காளிதாஸ் மற்றும் மகன் சுரேஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர் ஊர்களுக்குச் சென்று வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார்.

இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் சம்மதித்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடந்துள்ளது. 

வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று முடிந்து பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார்கள் ஒரு இடத்தில் தங்கியுள்ளனர். 

இத‌னிடையே மணமகன் உடை மாற்றிக் கொண்டு வருவதாக அறைக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே வராததால், அறைக்கு சென்று பார்த்த போது அவர் மயங்கிய கிடந்துள்ளார். 

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்  மருத்துவமனையில் சேர்த்தனர்.பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

#விழுப்புரம் : நண்பனின் முதலாமாண்டு நினைவு அஞ்சலியில் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் நூறு உயிரை காக்கும் நற்செயல்..!

Tue Nov 15 , 2022
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் மின்சார துறையில் லைன் மேன் பழனி மற்றும் மகன் ராஜகுரு வசித்து வந்துள்ளனர். ரத்தப் புற்றுநோய் காரணமாக மகன் சென்ற ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் தோழர்கள் மற்றும் கிராம மக்கள் 40 கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்தில் ரத்ததானம் அளித்துள்ளனர். இறந்தவரை […]

You May Like