சேலம் பகுதியில் உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன்(25) என்பவர். சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் தற்போது பணியாற்றி வருகின்றார். அந்த பகுதியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவியை ஒருதலையாக சில நாட்கள் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து பலமுறை தனது காதலை மாணவியிடம் சொல்லிய நிலையில், அதனை மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் சென்ற 7 ஆம் தேதி, மாணவி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் , பின்தொடர்ந்த அறிவழகன் தன்னை காதலித்தே ஆக வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இவரின் செயலால் பயந்து போன மாணவி, இதனை பற்றி தன்னுடைய தாயாரிடம் தெறிவித்துள்ளார். இதனையடுத்து அவருடைய தாயார் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல்நிலைய போலீசார் இந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.