மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை.
17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதால் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதே போல, லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு ஊழியர்களுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.