fbpx

காதல் மனைவியை.. கொன்று நாடகமாடிய கணவன்.. விசாரணையில் பகீர் தகவல்.!

செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் கழனிபாக்கத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் என்பவர். இவரது மனைவி சுதமதி(25) . இருவரும் காதலித்து வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் மதுராந்தகம் கழனிபாக்கம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டைகள் நிகழ்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் சுதமதி, துணிகளை அயன் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கணவன் ரஞ்சித் குமார் கூறினார். உயிரிழந்த மனைவியின் உடலை உடல்கூறாய்வு செய்வார்கள் என்றும், அதற்குள் நாம் இறுதி சடங்கு செய்து விடலாம் என்று உறவினர்களிடம் கூறி அவசர அவசரமாக, இறுதிச் சடங்கு செய்து முடிக்க ரஞ்சித்குமார் முயற்சி செய்துள்ளார்.

உறவினர் சிலருக்கு ரஞ்சித்குமாரே மனைவியை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலிசார் சுதமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பரிசோதனையின் போது சுதமதியின் தலையில் பலமாக தாக்கப்பட்டு அதனால் காயம் ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார் என்பது தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, ரஞ்சித் குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரஞ்சித் குமார் கூறிய வாக்குமூலத்தில் ” வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும்போது , மனைவி யாருடனோ போனில் பேசி கொண்டிருந்தார். அதை கண்டு மிகவும் கோபம் அடைந்து பலமாக தலையில் தாக்கினேன். இதனால் காயமடைந்த மனைவி உயிரிழந்தார்.” என விசாரணையில் கணவர் கூறியுள்ளார். அதன் பிறகு ரஞ்சித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

மோசமடைந்த பருவநிலை.. செத்து மடியும் உயிரினங்கள்.. உலக நாடுகள் உஷாராகுமா.?

Mon Nov 7 , 2022
சில நாடுகளில் பெருமழை பெய்து வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் போதிய மழையே இல்லாமல் பெரும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்ரிக்க நாடுகளில் போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டிலும் அந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் உலகின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரி இருக்கின்ற கென்யாவையும் இது விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்த சூழ்நிலையில் கென்ய […]

You May Like