தலைநகர் டெல்லியில் வாசித்து வருபவர்கள் அரவிந்த் மண்டல் ரேகா மண்டல் தம்பதியினர்
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து தன்னுடைய மகனை அழைத்து வந்து கொண்டிருந்த போது அரவிந்த் மண்டலக்கும், இன்னொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராருக்கு பிறகு இருவருக்கும் இடையே நடந்த தகராறு முடிவுக்கு வந்துள்ளது. அதன் பிறகு அரவிந்த் மண்டல் தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்.
ஆனால், அரவிந்த ஒரு தகராறு செய்த அந்த நபர் அரவிந்த் மீது கடுமையான கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கோபம் தற்போது அரவிந்தை மரண வாசல் வரையில் அழைத்துச் சென்று விட்டுவிட்டது.
அதாவது, அரவிந்த் அந்த நபருடன் சண்டையிட்ட வெள்ளிக்கிழமை இரவே இந்த கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் அரவிந்தின் வீட்டிற்குள், அத்துமீறி, நுழைந்து, அவரை சரமாரியாக, கத்தியால் குத்தி இருக்கிறது. இதை கண்ட அவருடைய மனைவி ராகா, அதிர்ச்சியடைந்து, கணவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
ஆனால் ராகாவையும் தலையில் பலமாக அந்த கும்பல் அடித்துள்ளது. இதன் காரணமாக, அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
கணவன், மனைவி உள்ளிட்டோரின் அலறல் சத்தம், அதிகப்படியான அளவில் கேட்டதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதறிப் போய் ஓடி சென்று பார்த்தபோது, கணவன்,மனைவி இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன் பிறகு சம்பவ இடத்திற்கு, விரைந்து வந்த காவல்துறையினர், இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும், மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், கணவன், மனைவி இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான், காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அனைத்து உண்மைகளும் தெரிய வந்துள்ளது. அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை மாலை தன்னுடைய மகனை, அரவிந்த் பள்ளியில் இருந்து அழைத்து வந்தபோது, அவருடன் சண்டை போட்டது மனோஜ் என்பவர் தான் என்று தெரியவந்துள்ளது.
இருவரும் நடு ரோட்டில் சண்டை போட்டுக்கொண்டு, அதன் பிறகு சமாதானமாகி, வீட்டிற்கு வந்துவிட்டாலும், மனோஜ், அரவிந்த் மீது கடுமையான கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் விளைவாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது, காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மனோஜ் உட்பட ஐந்து பேரை அதிரடியாக கைது செய்தனர். அதில் ஒருவர் சிறுவன் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்படியான சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.