வீட்டில் தனது மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட அவரது கள்ளக்காதலனை அந்த பெண்ணின் கணவர் சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலம் சாஸ்திரி பார்க் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தனது மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட அவரது கள்ளக்காதலனை அந்த பெண்ணின் கணவர் சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறார். இதுகுறித்து வடகிழக்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் பவேரியா கூறுகையில், ”நேற்று காலை 11 மணியளவில், தனது வீட்டில் மனைவியுடன் அவரது காதலன் பிடிபட்டுள்ளார். இதனால், பெண்ணின் கணவர் கோபமடைந்து தனது மனைவியையும், கள்ளக்காதலன் ரித்திக் வர்மாவையும் கடுமையாக தாக்கியுள்ளார்” என்றார்.
இதுகுறித்து ரித்திக் வர்மாவின் மாமா பேசுகையில், “ரித்திக்கின் நகங்களை வெட்டி கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். அவரது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் காயங்கள் இருந்தன” என்றார். சம்பவம் நடந்த வீட்டின் பக்கத்துவீட்டார் கூறுகையில், “ரித்திக் மற்றும் தன்னுடைய மனைவி இருவரையும் அந்த நபர் கடுமையாக தாக்கினார். ரித்திக் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்” என்றார்.
சம்பவ இடத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி காணப்பட்ட ரித்திக்கை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர்தான், அங்கு காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். இரவு 9 மணியளவில் ரித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : BEL நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் ரூ.55,000..!! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா..?