ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (51). பாஜகவில் ஊராட்சி மேம்பாட்டு துறை பிரிவு கிழக்கு ஒன்றிய மாவட்ட செயலாளராக உள்ளார். அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தார். மார்ச் 8ஆம் தேதி அதிகாலை விவசாய நிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், கிருஷ்ணகுமாரை மடக்கி பிடித்து கத்தியால் வெட்ட முயன்றிருக்கிறார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும், மர்ம நபர் அவரை ஓட ஓட கத்தியால் வெட்டியுள்ளார். கிருஷ்ணகுமாரை வெட்டிக் கொலை செய்த பிறகு, அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த நபரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த படுகொலை தொடர்பாக அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சீனிவாசன் பாஜக நிர்வாகியாகவும் இருப்பதால், மேலும் அவர் மீது சோளிங்கர் காவல் நிலையம் மற்றும் பொன்னை காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவம் முன் விரோத காரணமாக நடைபெற்று இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
Read more:பறவை கால்கள்.. வித்தியாசமான உடல் தோற்றம்.. வடோமா பழங்குடியினர்கள் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா..?