fbpx

பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை.. சட்டமன்றத்தில் வசனம் பேசிய ஸ்டாலின்.. இப்போ என்ன சொல்ல போகிறார்..? – EPS விமர்சனம்

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயதுமிக்க பெண் ஒருவர் பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர் ஒருவர் சிகிச்சையில் இருந்த அந்த பெண் நோயாளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. பெண் அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அந்த நபரை கைது செய்தனர். போலீஸ் நடத்தில் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரின் பெயர் சதீஷ் என்பதும் அவர் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.

பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? #யார்_அந்த_SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற “சார்”கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல “சார்”கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியிருந்தார்.

Read more ; மீண்டும் இணையும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி.. தகவலை உறுதி செய்த தயாரிப்பாளர்..!! – ரசிகர்கள் உற்சாகம்

English Summary

The incident of a woman being sexually assaulted at the Kilpakkam Government Hospital in Chennai has created a stir.

Next Post

காத்து வாங்கிய தியேட்டர்.. கேம் சேஞ்சர் 3 நாள் வசூல் இவ்வளவு தானா..? என்ன செய்ய போகிறார் ஷங்கர்..?

Mon Jan 13 , 2025
Game Changer 3 Days Collections.. How much did Ram Charan's movie collect..?

You May Like