மனநலம் குன்றிய சிறுமியை மூன்று சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
மும்பையின் காட்கோபர் பகுதியில் மனநலம் குன்றிய சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது மூன்று சிறார்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக கழிவறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
வைரலான வீடியோவை பார்த்த சிறுமியின் சகோதரர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். காட்கோபர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட சிறார்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மும்பை போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.