தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது, தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் லேசானது முதல் மிக அதிக மழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பல மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலைத் துறையின் கூற்றுப்படி, மகாராஷ்டிரா, கோவா, தெலுங்கானா, வடக்கு மற்றும் மத்திய கேரளா, வடக்கு உள் தமிழகம், வட கடலோர ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைடை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Read more ; பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நா.த.க முன்னாள் நிர்வாகிக்கு மாவுகட்டு..!