fbpx

பெர்லின் கிளம்பிய இந்திய அணியினர், ஜூன் 17ல் தொடங்கும் சிறப்பு ஒலிம்பிக்…!

சிறப்பு ஒலிம்பிக் கோடைக்காலப் போட்டியில் பங்கேற்பதற்காக 198 வீரர்கள் உட்பட உறுப்பினர்களை கொண்ட இந்திய அணி ஜூன் 12 அன்று ஜெர்மனி தலைநகர் பெர்லின் புறப்பட்டது. இதற்காக ஜூன் 8 ம் தேதி  அன்று நடைபெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியில், இந்திய அணி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இதுவரை இல்லாத அளவாக இந்திய அணிக்கு ரூ.7.7 கோடியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒதுக்கியுள்ளார்.இது இன்றுவரை இந்த போட்டிக்காக அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.

190 நாடுகளிலிருந்து 7 ஆயிரத்திற்கும் பங்கேற்கும் இந்த மேற்பட்ட வீரர்கள் உலகளவிலான போட்டிக்கு தயாராகும் வகையில், டெல்லியில்உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்திலும் அணியினர் பயிற்சி பெற்றனர். இந்த மிகப்பெரிய விளையாட்டுப்போட்டி ஜூன் 17 அன்று தொடங்கி ஜூன் 25 வரை நடைபெற உள்ளது. இந்திய அணியினர் பதக்கம் பெறும் நோக்கில் விளையாட்டுப்பிரிவுகளில் பங்கேற்கவுள்ளனர்.

Maha

Next Post

தரமான லியோ அப்டேட் இருக்கு..!

Wed Jun 14 , 2023
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் டீஸரை லோகேஷ் கனகராஜ் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது . உலக நாயகன் கமல்ஹாசனின் குரலில் இந்த டீஸர் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.தென் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாகியிருக்கும் திரைப்படம் ‘லியொ’. லோகேஷ் கனகராஜின்  சினிமேட்டிக் யுனிவர்சில் ஒன்றாக லியோ படம் இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு கூடியிருக்கும் தருணத்தில் தற்போது வெளியாகி […]

You May Like