fbpx

மிகப்பெரிய ஜாக்பாட்…; அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ரூ.4,000 போனஸ் அறிவிப்பு…! ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,000 வழங்கப்படும்…!

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் வரும் ஓணம் பண்டிகையை தொடர்ந்து அரசுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. போனஸுக்கு தகுதியில்லாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தெரிவித்துள்ளார்.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகள் நீட்டிக்கப்படும்.‌ சேவை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும்.

அனைத்து அரசுத் துறை ஊழியர்களும் ரூ.20,000 பண்டிகை முன்பணத்திற்கு தகுதியுடையவர்கள். அமைச்சரின் கூற்றுப்படி, பகுதி நேர மற்றும் தற்செயலான ஊழியர்களுக்கு ரூ.6,000 சம்பள முன்பணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

NEET PG: மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதிகளில் மாற்றம் செய்து அறிவிப்பு...! மீண்டும் எப்பொழுது...? முழு விவரம் உள்ளே...

Tue Aug 30 , 2022
நீட் முதன்நிலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 21-ம் தேதி நடைபெற்றது. நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளுடன், முதுகலை நீட் 2022-ம் ஆண்டிற்கான கட்-ஆஃப்களும் வெளியிடப்பட்டன. அதன்படி, பொதுப்பிரிவினர், EWS பிரிவினருக்கு கட் – […]

You May Like