fbpx

திருமணமாகியும் தந்தை வீட்டில் தங்கிய மகள்… ஆத்திரத்தில் அண்ணன் செய்த அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாவட்டத்தில் திருமணம் ஆன இளம் பெண்ணை அவரது சொந்த தம்பியை வெட்டி படுகொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் சரணடைந்த நபரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கு தேவயானி என்ற மகளும் கண்ணன் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் தனது மகளைக் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மருது என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்தார் ராமு. திருமணம் ஆகி கணவர் வீட்டிற்கு சென்றாலும் தேவயானி அடிக்கடி தனது தந்தை வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறார்.

இது அவரது தம்பி கண்ணனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதேபோன்று ஒரு நாள் தனது தந்தை வீட்டில் தங்குவதற்காக தேவயானி வந்த போது இது குறித்து அவரது தம்பி கண்ணன் அக்காவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இது இருவருக்கும் இடையே மோதலாக மாறி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த கண்ணன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது அக்காவை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்தில் பலியானார் தேவயானி.

இதனைத் தொடர்ந்து கொலை செய்த ஆயுதத்துடன் காவல் நிலையம் சென்று சரணடைந்திருக்கிறார் கண்ணன். இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று இறந்த தேவயானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரணடைந்த கண்ணனிடம் இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Kathir

Next Post

அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கம் இருக்கா?… குடல் புற்றுநோயை ஏற்படும்!… எப்படி நிறுத்துவது?

Wed Nov 22 , 2023
நம்மில் பலருக்கு அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கம் உள்ளது, அதாவது வெறும் வாயில் எதையாவது மென்று கொண்டிருக்கும் பழக்கம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பழக்கம் அதிகம் உள்ளது குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் எவ்வாறு நிறுத்துவது என இந்த பதிவில் பார்ப்போம். சமைக்கும் போதும் மாவு அரைக்கும் போதும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும் இந்த அரிசியை சாப்பிடும் […]

You May Like