fbpx

எல்லோருக்கும் கவனம்… தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை கொட்டி தீர்க்க போகும் கனமழை…! வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்ட செய்தி குறிப்பில் இன்று முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய, மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிர்ச்சி மரணம்... பிரபல இசைக்கலைஞர் உடல் நலக்குறைவால் காலமானார்...! சோகத்தில் ரசிகர்கள்...

Mon Aug 15 , 2022
பிரபல இசைக்கலைஞர் ஸ்விகா பிக் உடல் நலக்குறைவாழ் காலமானார். இஸ்ரேலிய இசைக்கலைஞர் ஸ்விகா பிக் தனது 72 வயதில் காலமானார். 1970 களில் புகழ்பெற்ற இஸ்ரேலிய ஆண் பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிக் “இஸ்ரேலி பாப்பின் ராஜா” என்று பலரால் அறியப்பட்டார்.ஹென்ரிக் என்று பெயரிடப்பட்ட ஸ்விகா பிக் 1949 இல் போலந்தில் பிறந்தார். அவரது வாழ்க்கையின் முதல் எட்டு ஆண்டுகளில், பிக் கிளாசிக்ஸ் மற்றும் பியானோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையைக் […]

You May Like