உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழம், தற்போது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பயிரிடப்பட உள்ளது..
ஜப்பானிய மியாசாகி என்று அழைக்கப்படும் உலகின் விலை உயர்ந்த இந்த மாம்பழம் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.. இந்த மியாசாகி மாம்பழங்கள் பொதுவாக ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த பழம் பழுத்தவுடன் ஊதா நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறும்.. ஒரு மியாசாகி மாம்பழம் சுமார் 350 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.. சர்வதேச சந்தையில் இந்த மாம்பழம் ஒரு கிலோ 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு மாம்பழம் 900 கிராம் எடை வரை கூட வளரும்.
முதலில் ஜப்பானின் மியாசாகி நகரில் பயிரிடப்பட்ட இந்தப் பழம், தற்போது இந்தியாவில் பயரிடப்பட உள்ளது.. மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில், இங்கிலீஷ் பஜார் பிளாக்கில் மாம்பழம் வளர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. ஜப்பானில் இருந்து மியாசாகி மாம்பழக் கன்றுகளை வரவழைக்கவும் திட்டமிட்டுள்ளது.. இந்த மா மரக்கன்றுகள் ஒரு வாரத்திற்குள் மால்டாவை அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த மா மரத்தின் மொத்தம் 50 மரக்கன்றுகள் ஜப்பானில் இருந்து தனியார் ஏஜென்சி மூலம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது..