fbpx

பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, கொடூரமாக கொன்று வீசிய தாய்……! காரணம் என்ன தெரியுமா…..?

பெண் பிள்ளைகள் மகத்தானவர்கள், பெண் கல்வி மிகவும் முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட, பெண் குழந்தைகளை கொலை செய்யும் சம்பவமும் நடைபெற்று வருகிறது என்ற செய்தி வருத்தம் அடைய செய்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்றை பெற்ற தாயை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிராவை சேர்ந்து ஸ்ரேயா என்ற பெண்ணுக்கு சென்ற ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், ஸ்ரேயா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், அவருடைய நினைப்புக்கு மாறாக பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்துள்ளார் ஸ்ரேயா.

இந்த சூழ்நிலையில் தான், கடந்த நான்காம் தேதி, தான் பெற்ற குழந்தை என்று கூட பார்க்காமல், இரக்கமற்ற நிலையில் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதன் பிறகு குழந்தையின் சடலத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி, சாலை ஓரத்தில் வீசிவிட்டு, ஸ்ரேயா தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில்,  கடந்த 11ஆம் தேதி சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தை பிறப்பை பதிவு செய்வதற்காக விசாரணை நடத்த ஸ்ரேயாவின் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவ்ஃர் வீட்டில் இல்லாததால் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, ஸ்ரேயா அந்த குழந்தையை கொலை செய்துவிட்டார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

ஆகவே இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் பிறகு காவல்துறையினர் ஸ்ரேயாவிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு குழந்தையை கொலை செய்து குழந்தையின் சடலத்தை வீசிய இடத்திற்கு சென்ற காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டனர். அதன் பிறகு ஸ்ரேயாவை கைது செய்திருக்கிறார்கள்.

Next Post

நீங்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா..? அப்படினா செம குட் நியூஸ்..!!

Mon Sep 18 , 2023
இன்றைய காலகட்டத்தில் எதிர்கால வருமானத்திற்காக பலரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதன்படி, தற்போது சுகன்யா சம்ரிதி யோஜனா, பிபிஎஃப் மற்றும் கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் இணைந்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி தொகையை உயர்த்தி வருகிறது. […]

You May Like