fbpx

‘அடங்காத அசுரன்..’ பாடலை போட்டி போட்டு பாடிய தனுஷ், ரகுமான்!! – அரங்கமே அதிர்ந்து போன தருணம்!!

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன், இந்த மாதம் 26ம் தேதி ரிலீஸாகிறது. பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், வரலஷ்மி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தனுஷின் 50வது படம் என்பதால் அவரே இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கியும் உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று அதாவது ஜூலை 6ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக விழா மேடையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இசை வெளியிட்டு விழாவில் தனுஷுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் பாட ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது.

படத்தின் இசை அமைப்பாளர் ரகுமானும் படத்தின் நடிகர் மற்றும் இயக்குநர் தனுஷ் இணைந்து அடங்காத அசுரன் பாடலைப் பாடினர். குறிப்பாக இருவரும் மாறி மாறி போட்டி போட்டு பாடினர். இது அங்கு கூடியிருந்த தனுஷ் ரசிகர்களுக்கும் ரகுமான் ரசிகர்களுக்கும் விருந்தாகவே அமைந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இசை அசுரனுடன் போட்டி போட்டுப் பாடும் நடிப்பு அசுரன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

English Summary

The music director of the film, Rakhuman, along with the film’s actor and director Dhanush, sang the song Adagatha Asuran. Especially when both of them took turns to compete and sing. It was a treat for Dhanush fans and Raghuman fans gathered there.

Next Post

பேக்கேஜ் உணவுப் பொட்டலங்களில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவு!. பெரிய எழுத்தில் எழுவது கட்டாயம்!. FSSAI!

Sun Jul 7 , 2024
Amount of sugar, salt and fat in package food packages! Capitalization is mandatory! FSSAI!

You May Like