வர, வர தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சரியில்லை பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அரசியல் ரீதியாக ஆளுங்கட்சியை, பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதைப் போல தமிழகத்தில் நாள்தோறும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் அருகே ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து, பின்பு அவரை தரதரவென்று, இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த ஒரு நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருப்பூர் அருகே உள்ள அவிநாசி மங்கலம் என்ற பகுதியில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்தார். இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் இரவு, அந்தப் பெண் தங்கியிருந்த பகுதிக்கு வந்த ஒரு மர்ம நபர், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையில் ஒரு பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளார். இதனால், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
அதன் பின்னரும் அந்தப் பெண்ணின் சடலத்தை தரதரவென்று இழுத்துச் சென்று, வேறு ஒரு இடத்தில் வைத்து, அந்த பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த மர்ம நபர். இந்த சம்பவம் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்
இது ஒரு புறம் இருக்க நேற்று காலை அந்த பகுதிக்கு வந்த மக்கள் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, அந்த பெண் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய குடும்பத்தினர் எங்கு உள்ளனர்? என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பெண்ணை பற்றிய விசாரணை ஒருபுறம் நடந்து வந்தாலும், இன்னொரு புறம் இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, குற்றவாளியை மிகத் தீவிரமாக, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
.