fbpx

சற்றுமுன்…! அடுத்த தமிழக பாஜக மாநில தலைவர் கேசவ விநாயகம்..! அண்ணாமலை அறிவிப்பு…!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு செல்வதால் மாநில தலைமை பொறுப்பை கேசவ விநாயகம் கவனித்துக்கொள்வார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உயர் கல்விக்காக பிரிட்டன் செல்ல இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. சர்வதேச அரசியல் குறித்த சான்றிதழ் படிப்பில் பங்கேற்க அண்ணாமலை லண்டனுக்கு செல்ல உள்ளார். இந்தியாவில் உள்ள 12 அரசியல் தலைவர்களை ஆண்டுதோறும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

இந்த ஆண்டில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த வகுப்பில் பங்கேற்க, அதற்கு ஒரு வாரம் முன்பு சென்னையில் இருந்து அண்ணாமலை லண்டனுக்கு செல்ல இருக்கிறார். அண்ணாமலை வெளிநாடு செல்ல, பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.

அரசியல் படிப்பிற்காக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு செல்கிறேன். அதற்காக 3 மாலை மாதங்கள் விடுப்பு எடுக்க உள்ளேன். மாநில தலைமை பொறுப்பை கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார் என அண்ணாமலை அறிவித்துள்ளார். செப்டம்பர் 2-ம் தேதி இங்கிலாந்து நாட்டில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் துவங்கும் வகுப்பில் பங்கேற்க உள்ளேன். நவம்பர் 2-வது வாரத்தில் வகுப்பு நிறைவு பெறும். பாஜகவில் கட்சி தலைவர் இல்லாத போதும் மற்றவர்கள் தலைவர் பணிகளை கவனிப்பார்கள் என நேற்று முன்தினம் அண்ணாமலை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

The next Tamil Nadu BJP state president is Kesava Vinayakam.

Vignesh

Next Post

ஒலிம்பிக்கில் தனிநபராக அதிக பதக்கங்களை வென்றவர்கள் யார்?. பதக்க எண்ணிக்கை எவ்வளவு?

Mon Aug 12 , 2024
Who has won the most individual medals in the Olympics? What is the number of medals?

You May Like