fbpx

Covai: செய்தியாளர் சந்திப்பில் வந்த சத்தம்… வலியால் துடித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்…!

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

காந்திபுரம் ஜி.பி. சிக்னல் பகுதியில் தொடங்கி சிவானந்தா காலனி வரை சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் திறந்த வாகனத்தில் நின்றவாறு கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிரதமர் மோடி மக்கள் சேவையை முன்னெடுத்து மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்றார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று நிர்மலா சீதாராமன்.. அய்யய்யோ.. என வலியால் துடித்து காலை பிடித்தார். நிர்மலா சீதாராமனை சுற்றி கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்ற நிலையில் அவரது காலில் திடீரென்று அடிப்பட்டது. மேலும் அவர், ”அது Fracture ஆன கால் என செய்தியாளரிடம் கூறினார். இதையடுத்த ரெஸ்ட் எடுத்த கொள்ளங்கள் என நிருபர் ஒருவர் கூறியபோது பரவாயில்லை என கூறி செய்தியாளர்களிடம் பேசினார்.

Vignesh

Next Post

200க்கும் மேற்பட்ட ஈரான் ட்ரோன்கள்!… இடைமறித்து தாக்கிய அமெரிக்கா!… நடுங்கும் உலக நாடுகள்!

Sun Apr 14 , 2024
Iran attack: இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய ஈரான், 200க்கு மேற்பட்ட டிரோன்கள், ஏவுகணைகளை மற்றும் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல் நடந்து வருவதாகவும் ஆனால் உள்வரும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பல இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெரும்பாலான ஏவுகணைகள் நீண்ட தூர […]

You May Like