ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று பொய்யான தகவல் பரப்பிய யூடியூபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தாம்பரம் பாரதமாதா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தனது செல்போனில் யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரேஷன் அட்டைக்கு நான்கு அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்றும் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ஒரு யூடியூப் சேனலில் செய்தி பதிவிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த கார்த்திகேயன், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் யூடியூப் சேனல் மீது புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், யூடியூப் சேனல் உரிமையாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகிரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை பார்த்து, தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். இதை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆதர படுத்தி சிறையில் அடைத்தனர்.