fbpx

அசைவ உணவா சாப்பிடுற? பெண் விமானியை அடித்து துன்புறுத்திய காதலன்..!! கடைசியில் நடந்த விபரீதம்..

அசைவ உணவு சாப்பிட கூடாது என துன்புறுத்தியதால் பெண் விமானி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காதலனை போலீசார் கைது செய்தனர்.

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிரிஷ்டி துலி(25) என்பவர் ஏர் இந்திய நிறுவனத்தில் விமானியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஏர் இந்தியாவில், விமானியாக பணியாற்றி துவங்கியது முதல் மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். டெல்லியில் பயிற்சிக்காக சென்ற போது, ஆதித்யா பண்டிட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது

கடந்த 25ம் தேதி வரை இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அன்றைய தினம் காரில், ஆதித்யா டெல்லி சென்றுள்ளார். அப்போது அவரை மொபைல்போனில் அழைத்த ஸ்ருஷ்டி, தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் ஆதித்யா வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் ஒருவர் உதவியுடன், கதவை திறந்து சென்ற போது ஸ்ருஷ்டி, டேடா கேபிளில் தூக்கு போட்டுக் கொண்டது தெரிந்தது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ருஷ்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆதித்யா சிரிஷ்டியை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. மேலும் தனது காதலியை அசைவ உணவு சாப்பிட கூடாது எனக் கூறி கட்டாயப்படுத்தியதாகவும் இளம்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி ஆதித்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; அதிக பாதாம் ஆபத்தாகலாம்.. ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்?

English Summary

The police arrested the boyfriend of the woman pilot who committed suicide after harassing her not to eat non-vegetarian food.

Next Post

இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..

Thu Nov 28 , 2024
சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதன்படி தீபாவளியன்று ரூ.59,640 என்ற புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. அதன் பின்னர் […]

You May Like