தக்காளியின் உற்பத்தி குறைந்ததால் தமிழ்நாட்டில் தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கியது. நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், தக்காளியின் விலையை குறைக்க வேண்டும் என இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து வீடுகளிலும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் தக்காளியின் விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் தான் அரசுக்கு சொந்தமான பண்ணை பசுமை கடைகளில் தக்காளியின் நிலை ஒரு கிலோ 568 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பெரிய சந்தை மற்றும் உள்ளூர் சந்தைகளில் தக்காளியின் விலை கிலோ 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் தக்காளியை தமிழக அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் அதாவது கிலோ ஒன்றுக்கு 68 ரூபாய் என்று விற்பனை செய்து வருகிறது.