fbpx

காலையிலே சென்னையில் பரபரப்பு…! போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அதிரடியாக கைது…!

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று நாளை எட்டியது. தமிழக அரசு சார்பில் மூன்று கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தப்பட்டது ஆனால் இந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அறிவித்தார். அத்துடன் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று காலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடந்த ஒரு வாரமாக 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தின் போது மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

பஸ், ட்ரெயின் என எல்லாவற்றிலும்..! காதல் நகரை கதற விடும் மூட்டைப்பூச்சிகள்…!

Thu Oct 5 , 2023
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமும் உலகத்தின் காதல் நகரமுமான பாரிஸ் நகரம் தற்போது ஒரு புதிய சிக்கலில் உள்ளது. குறிப்பாக பாரிஸ் நகரம் அதன் புகழ்பெற்ற கட்டிடங்கள், அற்புதமான அரண்மனைகள், பளபளப்பான பேஷன் தேர்வுகள் மற்றும் பலவற்றிற்கு புகழ்பெற்றது. தற்போது பாரிஸ் நகரம் ஒரு தலைப்பு செய்தியில் மாட்டியுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வளம் வரும் பாரிஸ் நகரில் புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. பாரிஸ் நகரை தற்போது அச்சுறுத்தி வருவது மூட்டைப்பூச்சி […]

You May Like