fbpx

Indian 2 Review | இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்!!

’HE IS BACK’..! உதயநிதி போட்ட ட்வீட்..! செம வைரலாகும் இந்தியன் - 2 அப்டேட்..!

கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற,  இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.

கமல்காசன் நடிப்பில், பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். ஊழலுக்கு எதிரான வலுவான கருத்துகளை முன்வைத்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். சித்தார்த் மறைந்த நடிகர்களான விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்தியன் 2 திரைப்படம், அவருக்கு கம்பேக் ஆக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெளிநாடுகள் மற்றும் தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் தொடங்கியது. இந்நிலையில், சோஷியல் மீடியாவில் முதல் சீனில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி வரை படம் எப்படி இருக்கிறது என வழக்கம் போல நெட்டிசன்கள் விமர்சனங்களை குவிக்க ஆரம்பித்து விட்டனர். ட்விட்டர் விமர்சனம் இதோ..

அமெரிக்காவில் இந்தியன் 2 படத்தின் ப்ரீமியர் காட்சியை பார்த்த ரசிகர்கள் தாத்தா வந்துட்டாரு என்றும் கமல்ஹாசன் சார் ஒரு லிவிங் லெஜண்ட் என்றும் ஃபயர் விட்டு வருகின்றனர். வட இந்தியாவுக்கும் சென்று இந்த முறை இந்தியன் தாத்தா அநீதிகளையும் ஊழல்களையும் களையெடுக்க களமிறங்கியுள்ளார்.

மற்றொரு பயனர், இந்தியன் தாத்தா கமல்ஹாசனை பாபி சிம்ஹா மற்றும் அதிரடி படையினர் கைது செய்வதற்கு முன்னதாக சோஷியல் மீடியாவில் இந்தியன் தாத்தாவுக்கு எதிராக குவியும் கமெண்ட்டுகளால் அவர் மனம் உடைந்து நடந்து செல்லும் போது “கப்பல் ஏறி போயாச்சு” பிஜிஎம் ஒலிக்கும் போது தியேட்டரில் ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைவதாக பதிவிட்டுள்ளனர்.

ஒரு பயனர், இந்தியன் 2 படத்தில் ஷங்கர் ஏகப்பட்ட நீண்ட வசனங்களை வைத்து ரசிகர்களை ரொம்பவே சோதித்து விட்டார். படம் பல இடங்களில் தொய்வாக உள்ளது. ஷங்கரின் பிரம்மாண்ட காட்சிகள் மட்டுமே பார்க்கும்படி உள்ளன. கமல்ஹாசன் என்னதான் எஃபோர்ட் போட்டு நடித்தாலும், இந்தியன் 2 போர் அடிக்கிறது என வெங்கி ரிவ்யூஸ் என்பவர் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் தாறுமாறாக இருக்கிறது என்றும் இந்தியன் 3 படத்துக்கான டிரைலர் கடைசியில் வருவது படத்திற்கான பலம். அதை பார்க்கவே ரசிகர்கள் நிச்சயம் இந்தியன் 2 படத்துக்கு வருவார்கள் என இந்த ரசிகர் இந்தியன் 2 படத்துக்கு ஃபயர் விட்டுள்ளார்.

Read more | Maharashtra MLC Elections | மகாராஷ்டிராவின் இன்று எம்எல்சி தேர்தல்!! களத்தில் வேட்பாளர்கள்..

English Summary

The second part of Kamal Haasan starrer, which was released 28 years ago and received huge response, released today.

Next Post

8 வயது சிறுமி மாயம்! கூட்டு பலாத்காரம் செய்த 6ம் வகுப்பு மாணவர்கள்... அதிர்ச்சி தகவல்.....

Fri Jul 12 , 2024
ஆந்திராவில் 8 வயது பள்ளி மாணவி 3 சிறுவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் 8 வயது பள்ளி சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தார். அந்த  சிறுமி வீடு திரும்பாததால்,  பெற்றோர்  உறவினர்கள் வீடுகளில் தேடியும்  கிடைக்காததால் சிறுமியின் தந்தை முச்சுமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து சிறுமியை பல இடங்களில் தேடி கிடைக்காததால் […]

You May Like