fbpx

தமிழகத்தில் பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலை…! வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு…!

தமிழகத்தில் பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் திமுக எனும் திராவிட மாடலின் சித்தாந்தமா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழக பாஜக, மதுரை மாவட்ட OBC அணியை சேர்ந்த சக்திவேல் அவர்களை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வண்டியூர் டோல் கேட் அருகே வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும்.

தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடந்து வந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் குற்றசெயல்கள் தொடர்ச்சியாக நடப்பதும் அத்தகைய அராஜகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் தமிழக மக்களுக்கு இந்த திராவிட மாடல் விடியா அரசு கொடுத்த அன்பு பரிசு.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எது வளர்ச்சி அடைந்ததோ இல்லையோ கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டும் வளர்ச்சியடைந்துள்ளன. தமிழகத்தில் பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் திமுக எனும் திராவிட மாடலின் சித்தாந்தமா? எப்போது விடியல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர். இப்படி தொடர் அராஜகத்தை செய்து வரும் இந்த விடியா அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

30 நாள் தான் டைம்...! பயிற்சி நிறுவனங்கள் குறித்து தவறான விளம்பரம்...! செக் வைக்கும் மத்திய அரசு...!

Sat Feb 17 , 2024
பயிற்சி நிறுவனங்கள் குறித்து தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கான வரைவு வழிகாட்டுதல்கள் பற்றி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது. நுகர்வோர் நலத் துறையின் இணையதளத்தில் வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் கருத்துகள் அல்லது பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் (அதாவது 2024, மார்ச் 16 வரை) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் அளிக்கலாம். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 2024, ஜனவரி 8 அன்று பயிற்சி நிறுவனங்களில் […]

You May Like